டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

0 742

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கை 15 நாள்களில் 2 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

 மகாராஷ்டிரா, தமிழகத்துக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே கொரோனாவால் டெல்லிதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல்  டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்படுதல் நடவடிக்கைக்கு ஆளாகும் பகுதிகளின் எண்ணிக்கையும் 15 நாள்களில் 2 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

அதாவது 15 நாள்களுக்கு முன்பு 58ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 158ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லி தென் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் தலா 31 பகுதிகளும், மேற்கு மாவட்டத்தில் 30 பகுதிகளும் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments