அடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்

0 1546

இந்தியாவுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சையளிக்க இந்தியாவில் இருந்து பல கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல், இந்தியாவுக்கு அமெரிக்கா வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்த டிரம்ப் 100 வென்டிலேட்டர்களின் முதல் தொகுப்பு அடுத்த வாரம் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments