இந்தியாவில் மேலும் 9,304 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 2.16 லட்சத்தை தாண்டியது..!

0 1082

நாட்டில் மேலும் 9 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் அத்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, பலியானோரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 9 ஆயிரத்து 304 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு அதிகபட்சமாக 260 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 75ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 737 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 1 லட்சத்து 4 ஆயிரத்து 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் தமிழகத்தில் 25 ஆயிரத்து 872ஆகவும், டெல்லியில் 23 ஆயிரத்து 645ஆகவும், குஜராத்தில் 18 ஆயிரத்து 100ஆகவும் அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 500ஐ தாண்டியுள்ள நிலையில், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், மேற்குவங்கத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் இதுவரை கொரோனா உறுதியாகியுள்ளது.

கர்நாடகா, ஆந்திரா, பீகார் மாநிலங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானாவில் 3 ஆயிரத்தை பாதிப்பு எண்ணிக்கை தாண்டியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments