இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

0 550

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆக்ராவை பூர்வீகமாகக் கொண்ட அலோக் சர்மா, பிரிட்டனில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில், தொழில்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று நிறுவனங்களின் ஆளுகை மற்றும் திவால் தொடர்பான சட்ட மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றிய அலோக் சர்மாவுக்கு, திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று பாதித்திருப்பது உறுதியானது. அலோக் சர்மா வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே, அந்நாட்டில் பிரதமர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறை செயலர்களும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments