10 - 15 நாட்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் - டாக்டர்

0 2389

கொரோனா தொற்றைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் 10 அல்லது 15 நாட்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் தொற்றுநோய் தடுப்பு நிபுணரான டாக்டர் குகானந்தம், கொரோனா வைரஸ் தொற்று 100 பேருக்கு ஏற்பட்டால் அதில் 5 பேருக்குத்தான் நோயாக மாறுவதாகக் குறிப்பிட்டார். அதிலும் வயதானவர்கள், ஏற்கனவே நோய்த் தொற்று உள்ளவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சென்னையில் மக்கள் தொகை அடர்த்தியாக இருப்பதும், தனிமனித விலகல் பின்பற்றப்படாததும் நோய் அதிகம் பரவக் காரணம் என்று கூறினார். அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றினால் 10 அல்லது 15 நாட்களில் பெரும் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறிய மருத்துவர் குகானந்தம், கொரோனாவைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments