மின் வயரில் சிக்கிய மரக்கிளையை அந்தரத்தில் தொங்கிச் சென்று அகற்றிய ஊழியர்

0 1330

தெலங்கானாவில் மின்சார வயர்களிடையே இருந்த மரக்கிளையை அகற்றிய ஊழியரை அனைவரும் பாராட்டிய நிலையில் அடிப்படை வசதி செய்து கொடுக்காத மின் நிறுவனத்தின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நிசாம்பூர் பகுதியில் மின் வயர்களுக்கு இடையே மரக்கிளை விழுந்ததால் அப்பகுதியில் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதனையறிந்த மின் நிறுவனத்தின் ஊழியரான நூர் என்பவர் பல அடி உயரத்தில் இருந்த மின்கம்பிகளைப் பிடித்து அந்தரத்தில் தொங்கியபடி தவழ்ந்து சென்றார்.

எந்த பாதுகாப்பு உபகரணமும் இன்றி மரக்கிளையை அகற்றிய அவர், பின் அதேபோல் தவழ்ந்தபடியே உயிரைப் பணயம் வைத்து தரையிறங்கினார். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து நூரைப் பாராட்டும் பலரும், அடிப்படை வசதிகளைச் செய்துதராத மின் நிறுவனத்தை விமர்சித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments