ஸ்பைஸ் ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை

0 605

டெல்லியில் ஸ்பைஸ் ஜெட் விமானி யுவராஜ் தலேஜா காரில் வீடு திரும்பும் போது அவரை மடக்கிய 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் அவரிடமிருந்த உடைமைகளைக் கொள்ளையடித்து அவரை கத்தியால் பலமுறை குத்தி ரத்த வெள்ளத்தில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.

படுகாயம் அடைந்த யுவராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐ.ஐ.டி மேம்பாலம் அருகே நள்ளிரவில் அவரை மடக்கி கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இது போன்ற கொள்ளை சம்பவங்கள் ஐஐடி அருகே அடிக்கடி நடப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments