9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி

0 1110

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறைவான தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களை ஜூன் ஒன்றாம் தேதி முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்நிலையில், இந்த 9 மாவட்டங்களிலும் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்கும்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை நீதிபதிகள் அனுப்பியிருந்த கோரிக்கைகளை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் நீதிமன்றங்களை திறப்பதற்கு தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.நீதிமன்றங்களில், 5 வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும், வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது, அங்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments