பரவும் போராட்டம்... பதற்றத்தில் அமெரிக்கா..!

0 2664

அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அழைப்பது தொடர்பாக தனக்கு முழு அதிகாரம் இருப்பதாகக் கூறிய அதிபர் டிரம்ப் கூறியுள்ள நிலையில், தனக்கு அதில் உடன்பாடு இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் பகுதியில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாயிட் என்பவர் போலீசாரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டதால் வணிக வளாகங்கள், வாகனங்கள் போன்றவை தீக்கிரையாகின. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அழைக்க முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவத்தை அழைப்பதற்கு தனக்கு முழு அதிகாரம் இருப்பதாகக் கூறிய அவர், அவ்வாறு செய்தால் மட்டுமே பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் போராட்டங்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அழைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர், மிகவும் அவசரமான மற்றும் மோசமான சூழல் ஏற்பட்டால் கடைசியாக மட்டுமே அதுபோன்ற முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்திற்கு நீதிகேட்டு லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் சிட்டிஹால் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரமாண்ட போராட்டம் நடந்தது

இந்த நிலையில் நிறவெறிக்கு எதிரான போராட்டம் அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலும் ஏராளமான இடங்களில் போராட்டம் நடந்துவரும் நிலையில், லண்டனில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. போலீசாரைச் சூழ்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் நடந்த தவறுக்கு அங்குள்ள சில காவலர்கள் பொதுமக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுள்ள நிலையிலும், லண்டனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வற்புறுத்தியதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது.

போராட்டங்களைப் படம் பிடிக்கும் பத்திரிகையாளர்களும் அடிக்கடி தாக்கப்பட்டு வருகின்றனர். செய்தியாளர்கள் என்று தெரிந்தும் காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments