கட்டுக்குள் வர மறுக்கும் கொரோனா.. உச்சம் தொட்ட அச்சம்..!

0 1576

நாடு முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை பெருமளவில் தளர்த்தியுள்ளதாலும், கொரோனா பரிசோதனை களை அதிகரித்துள்ளதாலும், வைரஸ் தொற்று உறுதி ஆவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதேநேரம் கொரோனாவின் பிடியில் இருந்து விடுதலை ஆகி, வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்தையும், உயிர்ப்பலி, 6 ஆயிரத்தையும் தாண்டி விட்டது.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து ஆயிரத்து 497 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் . அதேநேரம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் புதிதாக 2 ஆயிரத்து 560 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. அங்கு,
ஒரே நாளில் 122 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 2 ஆயிரத்து 587 ஆக உயர்ந்துள்ளது.

2 - வது இடம் வகிக்கும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 26 ஆயிரத்தை நோக்கி முன்னேறுகிறது.

டெல்லி 3- வது இடம் வகிக்க, அங்கு கொரோனா பாதிப்பு, 23 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. 4 - வது இடம் வகிக்கும் குஜராத்தில், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்து 700 -ஐ நெருங்கி, இந்த பட்டியலில் , அம் மாநிலம் 5ஆவது இடம் வகிக்கிறது . மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக
உயர்ந்து உள்ளது.

பல மாநிலங்களில் வேகமாகவும் சில மாநிலங்களில் கணிசமாகவும் உயரும் கொரோனா, கட்டுக்குள் வர மறுப்பதால், ஒடுக்கும் பணியை சுகாதாரத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments