முகம் தெரியா நண்பருக்கு.. முக நூலில்.. ரூ 3 லட்சம் மொய்..!

0 9565

மதுரையில் முகநூலில் போலிக்கணக்கில் அறிமுகமான முகம் தெரியாத நபர் சொன்ன, கொரோனா கதையை நம்பி, 3 லட்ச ரூபாயை பறிகொடுத்த கொடை வள்ளல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

மதுரையில் முக நூல் மூலம் பணம் கறக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் எஸ்.எஸ் காலனி சீனிவாசன் என்பவர் நாள் முழுவதும் முக நூலில் மூழ்கி கிடந்துள்ளார்.

அப்போது, சீனிவாசனின் நெருங்கிய நண்பரின் பெயரை சொல்லி முக நூலில் பேசிய மர்மநபர் ஒருவர், தனது உறவினருக்கு கொரோனா சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகின்றது என்று கூறி கடன் கேட்டுள்ளார், முகம் பார்க்காவிட்டாலும் நண்பன் தானே என்ற நம்பிக்கையில் சீனிவாசனும் பணம் கொடுத்துள்ளார்.

கொஞ்சம் கொஞ்சமாக 3 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்ட அந்த நபர், திடீரென்று துண்டித்துக் கொண்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நண்பனுக்கு செல்போனில் கேட்ட போது தனக்கும் கடன் வாங்கிய நபருக்கும் தொடர்பில்லை என்று கூரியதையடுத்து தன்னிடம் நண்பரின் பெயரை சொல்லி நம்ப வைத்து போலி கணக்கால் தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த சீனிவாசன் மதுரை மத்திய குற்றபிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

நண்பனின் பெயரில் முக நூலில் அழைப்பு விடுத்த போலி கணக்கை நம்பி, பணத்தை கூகுல் பே மூலம் மொய்யாக கொடுத்துவிட்டு சீனிவசன் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் கத்திருக்கின்றார்.

தான் வசிக்கும் வீட்டில் இருந்து மூன்றாவது வீட்டில் வசிப்பவர் யார் என்று தெரியாத பேனா நண்பர்கள் தான் தற்போது முகநூலில் நண்பர்களை தேடிச்சென்று பணத்தை பறி கொடுத்து விட்டு வெளியில் சொல்ல வெட்கப்பட்டு தவித்து நிற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments