விஜய் மல்லய்யாவை உடனடியாக இந்தியா அழைத்து வர வாய்ப்பில்லை -தூதரக அதிகாரிகள்

0 2219

தொழிலதிபர் விஜய் மல்லய்யாவை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்க இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் சட்டரீதியான நடவடிக்கைகளால் விஜய் மல்லயாவை உடனடியாக இந்தியா அழைத்து வர வாய்ப்பு இல்லை என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு மும்பைக்கு விஜய் மல்லய்யா அழைத்து வரப்பட்டதாக சில ஊடக தகவல்கள் வெளியானதையடுத்து தூதரக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை செலுத்தத் தவறி லண்டனுக்குத் தப்பிச் சென்ற மல்லையாவை இந்தியா அனுப்புவதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது .அவர் இங்கிலாந்து சட்டப்படி அடைக்கலம் கோரி மனு அளித்திருந்தால் அவரை நாடு கடத்த வாய்ப்பிருக்காது என்று தகவல் வெளியானது. அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வர சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆனாலும் சில சட்டரீதியான நடவடிக்கைகளால் விஜய் மல்லய்யாவை அழைத்துவருவதில் மேலும் தாமதமாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments