திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டவன் கைது

0 1447

சென்னையில் திருமண வரன் தேடும் இணையதளம் மூலம் பெண்ணிடம் பழகி, நெருக்கமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு 3 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் மோசடி நபர் அஜ்மல் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவரே அஜ்மலால் பாதிக்கப்பட்டவர். மோசடி நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் மீது வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து விசாரணை நடத்திய அதிகாரியை மாற்றி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இந்த நிலையில் திருவல்லிக்கேணியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அஜ்மலை போலீசார் கைது செய்தனர்.

ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார். அஜ்மலின் செல்போனில் பல பெண்களுடன் இருக்கும் படம் உள்ளதால், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments