கொரோனா பாதிப்புகள் குறித்து ரகசியம் காக்கும் வட கொரியா

0 3276

வட கொரியாவில், வழக்கமாக ஏப்ரல் 1 ஆம் தேதி துவக்கப்படும் கல்வியாண்டு, கொரோனா அச்சத்தால் 2 மாதங்கள் தாமதமாக துவக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முகக்கவசம் அணிந்து அங்குள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு வந்த சிறுவர் சிறுமியருக்கு, வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது.

கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரிய அரசு, அந்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறித்து ரகசியம் காத்து வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதத்துக்கு முன் சீனாவில் இருந்து வட கொரியா சென்றவர்கள் மூலம், அங்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments