ஊரடங்கின் 3 மாதங்களில் மட்டும் 'Zoom' நிறுவனத்திற்கு ரூ.2500 கோடி வருவாய்

0 8438

ஊரடங்கால் தனது வருமானம் 169 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பிரபல வீடியோ கான்பரன்ஸ் நிறுவனமான ஜூம் (Zoom) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் வரை முடிந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 2500 கோடி ரூபாய் (328 மில்லியன் டாலர்) வருமானம் கிடைத்துள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி எரிக் யுவான் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று வெடித்த பிறகு, பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் மற்றும் ஊரடங்கால், ஜூமை பயன்படுத்துகிற, 10 க்கும் அதிகமான ஊழியர்களை கொண்டநிறுவனங்களின் எண்ணிக்கை 2,65,400 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது கடந்த ஆண்டை விடவும் 354 மடங்கு அதிகம் என அவர் கூறினார். இந்த செயலியை 40 நிமிடங்கள் வரை இலவசமாக பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments