3 மாதங்களுக்கு பின் இத்தாலியில் துவங்கப்பட்ட ரயில் சேவை

0 616

இத்தாலியில், உள்நாட்டு ரயில் சேவை மீண்டும் துவக்கப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் பணிபுரிபவர்கள், சொந்த ஊருக்கு திரும்ப, ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

ஏறத்தாழ 3 மாதங்கள், ஊரடங்கால், உற்றார் உறவினரை காணாது, தவித்து வந்தவர்கள், ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால், சொந்த ஊருக்கு செல்லும் ஆர்வத்தில், அதிகாலை முதல் ரயில் நிலைங்களை நோக்கி படையெடுத்தனர்.

முகக்கவசம் அணிந்து ரயில் நிலையம் வந்த அனைவருக்கும், வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, தனிநபர் இடைவெளி கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments