சென்னையிலிருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் பயணம்

0 595

சென்னையிலிருந்து, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலம் அனுப்பிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை செண்ட்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து இதுவரை 72 சிறப்பு ரயில்கள் மூலம் 1 லட்சத்து 439 பேர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேக்நாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்திற்கு 30816 பேரும், உத்திரபிரதேசத்திற்கு 16448 பேரும், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 12,853 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மாநிலம் திரும்பும் அனைவருக்கும் சென்னை மாநகராட்சி சார்பாக சோப், சானிடைசர் உள்ளிட்டவை அடங்கிய வழியனுப்பும் கிட் கொடுக்கப்படுவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments