தமிழகத்தில் ஜனவரி - மே வரையிலான சாலை விபத்துகளில் 2,375 பேர் உயிரிழப்பு

0 948

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த கடந்த இரு மாதங்களில், 262 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான முதல் 5 மாதத்தில் 4 ஆயிரத்து 315 விபத்துகளும், அதில் 4 ஆயிரத்து 650 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதுவே நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 197 விபத்துகளில் 2 ஆயிரத்து 375 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக காவல் துறையின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த 251 சாலை விபத்துகளில் 262 பேர் பலியாகியுள்ளனர். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வெளியில் வந்த பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் காலியாக இருந்த சாலைகளில் அதிவேகத்தில் பயணித்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக காவல் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments