திமுக பொருளாளராகத் துரைமுருகனே தொடர்ந்து நீடிப்பார் - மு.க.ஸ்டாலின்

0 1470

திமுக பொருளாளராகத் துரைமுருகனே நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா அச்சுறுத்தும் நேரத்தில் பொதுக்குழுவைக் கூட்டிப் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்குத் தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு பொதுக்குழு கூடும் வரையில், துரை முருகன் கொடுத்த பதவி விலகல் கடிதத்தின் பெயரில் தான் எடுத்த நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக பொருளாளர் பதவியில் துரைமுருகனே தொடர்ந்து நீடிப்பார் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments