கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து காயம் - பட்டம் பறக்கவிட்ட 3 பேர் கைது

0 419

சென்னை கிண்டியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்க விட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதோடு, மீறும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு மடிப்பாக்கத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, மாஞ்சா நூல் அறுத்து கழுத்தில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், மடுவின்கரை பகுதியை சேர்ந்த நரேந்திரகுமார், சிவா, யுவராஜ் ஆகிய மூவரையும் கிண்டி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments