புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ. 10,000 வழங்க மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை

0 643

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருமுறை நிவாரணமாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் அவர்களின் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, கொரோனா பெருந்தொற்றால் கற்பனை செய்ய முடியாத இன்னல்களை மக்கள் எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும், அமைப்புச் சாராத் தொழிலாளர்களுக்கும் ஒருமுறை நிவாரணமாகப் பத்தாயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். பி.எம். கேர்ஸ் நிதியை இதற்காகப் பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments