இந்தியா என்ற பெயரை மாற்ற நாங்கள் உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம்

0 9348


இந்தியாவின் பெயரை பாரத் அல்லது இந்துஸ்தான் என்று மாற்ற கோரி, உச்சநீதிமன்றத்தில் டெல்லியை சேர்ந்த நமக் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1- ல் அதற்கான மாற்றத்தை செய்ய உத்தரவிடும்படியும் கூறியிருந்தார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், '' இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே இந்தியா என்கிற பாரத் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் எங்களால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் இது தொடர்பாக அரசிடத்தில் முறையிட்டுக் கொள்ளலாம் '' என்று தெரிவித்துள்ளனர்.

நம்நாடு முகலாயர்கள் காலத்தில் இந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில்தான் இந்தியா என்று மாற்றப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயர் அடிமைத்தனத்தை குறிக்கும் வகையில் இருப்பதாகவும் எனவே அந்த பெயரை நீக்கி விட்டு பாரத் என்ற பெயரால் மட்டுமே  அழைக்க  வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் ஆங்கில பெயரான ' இன்டஸ்' என்பதிலிருந்து உருவானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments