துபாயில் சிக்கியிருந்த 153 இந்தியர்கள் இந்தியா வருகை

0 626

துபாயில் சிக்கியிருந்த  இந்தியர்களில் 153 பேர்  சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கால் சர்வதேச விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், பல்வேறு நாடுகளுக்கும் சென்ற இந்தியர்கள் திரும்பி வர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம், இந்தியா அழைத்து வரும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த வகையில் இந்த 153 பேரும் சண்டிகர் சர்வதேச விமான நிலையத்தை நள்ளிரவு வந்தடைந்ததனர். அவர்களுக்கு  விமான நிலையத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments