ஜூலை 1 முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கர்நாடகா அரசு அறிவிப்பு

0 1827

கர்நாடகாவில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 4 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை ஜூலை ஒன்றாம் தேதியும், 1 முதல் 3 ஆம் வகுப்பு மற்றும் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஜூலை 15 ஆம் தேதியும், மழலையர் பள்ளிகளை ஜூலை 20 ஆம் தேதியும் திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் பொருட்டு வரும் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ள பள்ளிக்கல்வித்துறை, 8 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை தொடங்க அனுமதி வழங்கி உள்ளது.

பள்ளிகளை திறப்பது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இம்மாதம் 10 முதல் 12 ஆம் தேதிக்குள் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு, அறிக்கை அனுப்பவும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments