ரூ. 2 லட்சம் கடனை அடைக்க சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கார் திருட்டு

0 3501

சென்னையில், 2 லட்சம் ரூபாய் கடனை அடைக்க சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஜாகுவார் காரை திருடிச் சென்ற காவலாளியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

அண்ணா நகர் 6வது அவென்யூவை சேர்ந்தவரான பால சுப்பிரமணியன், மதுரவாயலில் உள்ள கூரியர் நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குனராக பணி புரிந்து வருகிறார். இவர் அலுவலகம் வந்து செல்ல, அந்த நிறுவனம் சார்பில் ஜாகுவார் சொகுசு கார் அளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 30ம் தேதி காலை அந்த கார் காணாமல் போயுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் பகுதிநேர ஓட்டுநர்களாக அக்காரை ஓட்டிவந்த காவலாளி விஜய்ராம் உள்ளிட்ட 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். கடனை அடைக்க காரை திருடி அம்பத்தூருக்கு கொண்டு சென்று விற்க முயற்சி செய்ததை விஜய்ராம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து விஜய்ராமை கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments