இந்தியாவில் மேலும் 8,909 பேருக்கு கொரோனா.. 2 லட்சத்தை தாண்டியது பாதிப்பு..!

0 956

நாடு முழுவதும் மேலும் 8 ஆயிரத்து 909 பேருக்கு கொரோனா உறுதியானதால், நாட்டில் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 615ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்து 815ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 909 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், 217 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவியது முதல் இதுவே மிகவும் அதிகபட்ச பாதிப்பு என கூறப்படுகிறது.

நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 615ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்து 815ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து ஆயிரத்து 497 பேர் சிகிச்சை பெறும் நிலையில், ஒரு லட்சத்து 303 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 300ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 465ஆகவும் அதிகரித்துள்ளது. 2ம் இடத்திலுள்ள தமிழகத்தில் 24 ஆயிரத்து 586 பேருக்கும், 3ம் இடத்தில் உள்ள டெல்லியில் 22 ஆயிரத்து 132ஆகவும், 4ம் இடத்திலுள்ள குஜராத்தில் 17 ஆயிரத்து 617ஆகவும் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. 5ம் இடத்திலுள்ள ராஜஸ்தானில் 9 ஆயிரத்து 373 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments