அரிதினும் அரிதான நீள்மூக்கு எச்சிட்னா விலங்கு கேமராவில் சிக்கியது

0 1900

ஆஸ்திரேலியாவில் அரிதினும் அரிதான எலி போன்ற உயிரினம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பார்க்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூகினியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படுபவை நீள்மூக்கு எச்சிட்னா என்ற உயிரினம். எறும்பு, கரையான் உள்ளிட்ட பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழும் இந்த வகை உயிரினம், உடலில் முட்கள் போன்ற அமைப்பைப் பெற்றுள்ளன. தரையில் வளைதோண்டி மாதக்கணக்கில் அதனுள் வாசம் செய்யும் எச்சிட்னாக்கள் இரவு நேர உயிரினங்களாக இருப்பதால் இதனைப் பார்ப்பது மிகவும் அரிதாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் சிட்னி அருகே உள்ள தரோங்கா விலங்கியல் பூங்காவில் எச்சிட்னாக்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள வைக்கப்பட்டிருந்த கேமராவில் நீர் அருந்தும் காட்சிகள் பதிவாகி உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments