மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கிய காவலதிகாரிகள் பணியிடை நீக்கம்

0 644

அமெரிக்காவில் கருப்பினப் பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பால்டிமோர் பகுதியில் சிறு விபத்து தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட கருப்பினப் பெண் ஒருவரை போலீசார் இழுத்துச் செல்ல முயன்றபோது, அந்தப் பெண் தன்னைப் பிடித்திருந்த போலீசாரைத் தாக்கினார். இதனைக் கண்ட மற்றொரு காவல்துறை அதிகாரி முகத்தில் தாக்கியதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அந்தப் பெண் தலையில் காயமேற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கருப்பின பெண்ணைத் தாக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக மின்னசொட்டா பகுதியில் கருப்பின இளைஞரை போலீசார் மிதித்துக் கொன்றதால், அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments