கொரோனா குறித்து.. நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரர்..! நம்ம அலர்ட் ஆட்டோக்காரர்

0 2998

சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், தனக்கும் தனது ஆட்டோவில் வரும் பயணிகளுக்கும் கொரோனா  நோய்த் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என அதிகபட்ச அலர்ட்டாக ஆட்டோவை இயக்கி வருகிறார். கொரோனா குறித்த விழிப்புணர்வுடன் வலம் வரும் "நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரர்" குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சாலை பயணம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டுமோ அதே போல் கொரோனா தொற்றில் இருந்தும் தன்னையும் தனது பயணிகளையும் காப்பாற்றுவதில் முன் எச்சரிக்கையாக வலம் வருகிறார் வேளச்சேரி ஆட்டோ ஓட்டுநர் திலீப்குமார்...!

கொரோனா பரவலை தடுக்கவும், நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சம் குறித்து மருத்துவ வல்லுனர்கள் மிக தெளிவாக கூறி வரும் நிலையில், அரசு அளித்த தளர்வுகள் அடிப்படையில் ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்கலாம் என்ற உத்தரவை பின்பற்றும் வகையில் 60 நாட்களுக்கு பிறகு ஆட்டோத் தொழிலை தொடங்கி உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிகளை ஏற்றிச்செல்கிறார் திலீப்குமார்.

தனக்கு கொரோனா நோய்த் தொற்று வந்துவிடக் கூடாது என பி.பி.இ எனப்படும் உடல் முழு பாதுகாப்பு கவசத்தை அணிந்து கொண்டு ஆட்டோ ஓட்டுகிறார். ஆட்டோவில் பயணிப்பவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்து, தனது ஆட்டோவில், ஓட்டுநருக்கும், பயணிப்பவருக்கும் இடையே பிளாஸ்டிக் திரை ஒன்றை அமைத்துள்ளார்.

அதே வேளையில், ஆட்டோ பயணிகளுக்கு வழங்க கிருமி நாசினி, முக கவசம் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொண்டு கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை நகரில் வலம் வருகிறார் இந்த ஆட்டோ ஓட்டுநர்.

பயணிகளை இறக்கி விட்ட பின்னர், ஆட்டோ இருக்கைகளையும் பிளாஸ்டிக் திரையினையும் முழுவதுமாக கிருமி நாசினியை பயன்படுத்தி சுத்தம் செய்வதையும் அவர் வாடிக்கையாக கொண்டு உள்ளார்.

பயணிகளுக்கும் தனக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் இவரைப் போன்று செயல்பட்டால் கொரோனா மட்டுமல்ல மற்ற தொற்று நோய்களையும் வெல்ல முடியும் ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments