கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஹஜ் பயணத்தைத் ரத்து செய்யக் கோரிக்கை

0 513

கொரோனா தொற்றினைத் தவிர்க்க நடப்பாண்டு ஹஜ் பயணத்தைத் தவிர்க்குமாறு தனது நாட்டு மக்களை இந்தோனேஷியா கேட்டுக் கொண்டுள்ளது.

வைரஸ் பரவல் காரணமாக இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மூடப்பட்டது.

இதன்காரணமாக அங்கு ரம்ஜான்  நோன்புக்கான தொழுகை நடத்தப்படவில்லை. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் நடப்பாண்டு 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஹஜ் செல்வதற்காக விண்ணப்பித்திருந்தனர்.

ஆகஸ்ட் மாதம் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜூலை மாதத்தில் பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டு புனிதப் பயணத்தை சவுதி அரசு அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து ஹஜ் பயணத்தை ஒத்திவைக்குமாறு இந்தோனேஷிய அரசு அந்நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments