நிசர்கா புயல் காரணமாக 17 விமானங்கள் ரத்து - இண்டிகோ நிறுவனம்

0 1262

மகாராஷ்டிராவில் நிசர்கா புயல் காரணமாக 17 விமானங்களை ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இன்று மும்பையில் இருந்து சண்டிகர், ராஞ்சி மற்றும் பாட்னா ஆகிய நகரங்களுக்கு 3 விமானங்களை மட்டுமே இயக்க உள்ளதாக தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு மாற்றுப் பயணத்திட்டத்தை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக நிசர்கா புயல் இன்று கரையைக் கடக்க உள்ள நிலையில் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments