இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

0 742

தொடர்ந்து 5வது வர்த்தக தினத்திலும் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 522 புள்ளிகள் உயர்ந்து, 33 ஆயிரத்து 825ல் நிலை பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 152 புள்ளிகள் அதிகரித்து, 10 ஆயிரத்தை நெருங்கியது. இந்த உயர்வின் மூலம் 3 மாதங்களுக்கு முன்பு இருந்த உச்ச நிலையை சந்தை எட்டியுள்ளது. வங்கி, நிதி நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், எப்எம்சிஜி துறை சார்ந்த நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தமானது.

அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 36 காசுகளாக இருந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments