தமிழ்நாட்டில் இன்று 1091 பேருக்கு கொரோனா உறுதி

0 5372

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1091 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 55 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த 2 பேர், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக தமிழகம் திரும்பிய 53 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் 24 ஆயிரத்து 586 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சென்னையை சேர்ந்த 12 பேர் மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவர் என 13 பேர் உயிரிழந்ததால், மொத்தம் பலியானவர்கள் எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,094 கொரோனா மாதிரிகள் மாநிலத்தில் உள்ள 73 ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

வைரஸ் பாதிப்பில் இருந்து மேலும் 536 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 13 ஆயிரத்து 706 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 7 ஆயிரத்து 176 பேர் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 1,378 பேரும், 13 வயது முதல் 60 வயது வரையிலான நபர்களில் 20 ஆயிரத்து 857 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2,351 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments