கொரோனா அவசர சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல்

0 4466

கொரோனா நோயாளிகளின் அவசர சிகிச்சைக்கு ஆன்டிவைரல் மருந்தான ரெம்டெசிவரை வழங்கலாம் என மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவமனை சிகிச்சையில், இந்த மருந்து மூலம் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைப்பதாக கூறப்படுவதை அடுத்து அமெரிக்காவிலும், ஜப்பானிலும் அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜூன் ஒன்று முதல் கொரோனா அவசர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு 5 டோசுக்கு மிகாமல் இதை வழங்கலாம் என இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.

தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்த மருந்தை பயன்படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments