ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட் கட்டணங்களை திரும்பப் பெற சிறப்பு மையங்கள்

0 1175

ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற, சேலம் கோட்டத்தில் நான்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கோவை ஜங்ஷன், திருப்பூர், ஈரோடு ஜங்ஷன், கரூர் ஜங்ஷன் ஆகிய இடங்களில், இம்மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை செயல்படும் இம்மையத்தில் கட்டணத்தை திரும்ப பெற, காலை, 8 மணிக்கு 'டோக்கன்' வழங்கப்படும்.

முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெற, பயணிக்க இருந்த நாளிலிருந்து, ஆறு மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், பயணியர் அவசரப்பட தேவையில்லை என, ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் ஆன்லைன் மூலமே கட்டணத்தை திரும்ப பெறலாம் என்றும் மையங்களுக்கு வருவோர், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments