ஈரானில் ஒரே நாளில் 3117 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

0 532

ஈரானில் கொரோனா தொற்று பரவிய காலத்தில் இருந்து இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாக ஒரே நாளில் 3117 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி  நிலவிய மின்னல் வேக பரவலான 3186 என்ற எண்ணிக்கையை நினைவூட்டுவதாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் 64 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இவர்களையும் சேர்த்து இறப்பு எண்ணிக்கை 7942 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் 1,57,562 ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments