இந்தியாவில் கொரோனா பாதிப்பு.. 2 லட்சத்தை நெருங்கியது..!

0 1211

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. அந்தத் தொற்றிலிருந்து குணமானோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை   70 ஆயிரத்து 13 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 362ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை டெல்லியில் 20 ஆயிரத்து 834ஆகவும், குஜராத்தில் 17 ஆயிரத்து 200ஆகவும் உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பீகார், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், அசாம், கேரளா மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 204 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் , பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 598ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் அத்தொற்றிலிருந்து குணமானோரின் எண்ணிக்கையும் 95 ஆயிரத்து 527ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments