10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி வழக்கு

0 1831

10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமலேயே 10ம் வகுப்பு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதவும், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் தேர்வு பணிகளில் ஈடுபடவும் உள்ள நிலையில், அத்தனை பேரின் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு மையங்களில் எத்தனை சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர் என அரசு தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கால் விடுதிகளில் புத்தகங்களை விட்டுச் சென்ற மாணவர்களால் தேர்வு எழுதுவது கடினம் என்றும், எனவே 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments