டெல்லி பாஜக-வுக்கு புதிய தலைவர்..!

0 1208

டெல்லி பாஜக தலைவராக இருந்த மனோஜ் திவாரி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக அதேஷ் குமார் குப்தா என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடகிழக்கு டெல்லி எம்பியும், போஜ்பூரி நடிகருமான மனோஜ் திவாரி கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி பிரதேச பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டில் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காததை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

ஆனால் மாற்று தலைவர் நியமிக்கப்படும் வரை பதவியில் தொடருமாறு அவரை பாஜக தலைமை கேட்டுக் கொண்டது. புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அதேஷ் குமார் குப்தா வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments