' ஸ்ரீபிரியா வேடத்தில் ஸ்ருதி ஹாசன்: ' 'அவள் அப்படித்தான்' ருத்ரையா குடும்பத்தை அணுகும் பத்ரி வெங்கடேஷ்

0 1937


தமிழ் திரையுலகில் மிகவும் பேசப்பட்ட சினிமாக்களில் 'அவள் அப்படித்தான்' படமும் ஒன்று. தமிழ் சினிமாவில் பெண் சுதந்திரம் பற்றி தீர்க்கமாக பேசிய படங்களில் அவள் அப்படித்தான் திரைப்படம் முக்கியமானது.

கடந்த 1978- ம் ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் , ஸ்ரீபிரியா நடிப்பில் வெளி வந்து முத்திரை பதித்த இந்த படம் 42 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீமேக் செய்யப்படவுள்ளது . 'செம போதை ஆகாதே!' , 'பானாகாத்தாடி ' போன்ற படங்களை இயக்கிய , பத்ரி வெங்கடேஷ் , அவள் அப்படித்தான் படத்தை மீண்டும்  எடுக்க முயற்சித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி இந்த படத்தில் ஸ்ரீபிரியா வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இது குறித்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறுகையில்,' அவள் அப்படித்தான் இந்திய சினிமாவின் முக்கிய அடையாளம். தற்போதைய காலக்கட்டத்துக்கு இந்த படத்தின் கதை மிக அழாகாக பொருந்தும். நானும், ஸ்ருதியும் நல்ல நண்பர்கள். இருவரும் சேர்ந்த விவாதித்து, நல்ல முடிவுக்கு வருவோம் . படத் தயாரிப்பாளர் கிடைத்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் '' என்றார்.

அவள் அப்படித்தான் படத்தை இயக்கிய சி. ருத்ரையா கடந்த 2015- ம் ஆண்டு இறந்து போனார். ருத்ரையா  இயக்கிய' கிராமத்து மின்னல்கள்' என்ற படமும் தோல்வியுற்றது. இதற்கு பிறகு, சி. ருத்ரையா வேறு படங்களை இயக்கவில்லை.

அவள் அப்படித்தான் படத்தின் வித்தியாசமான கதையம்சம்சத்தை போலவே, ருத்ரையாவும் கதைகளுக்காக மட்டுமே படம் எடுப்பவர். பணத்துக்காக எந்த சமரசத்தையும் செய்து கொள்ள மாட்டார் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் சொல்வார்கள்.

இது குறித்து பத்ரி வெங்கடேஷ் கூறுகையில், '' இந்த படத்தின் ரீமேக் உரிமை யாரிடத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை. அவள் அப்படித்தான் படத்துக்கு கதை எழுதியவர் மற்றும் இயக்குநர் ருத்ரையாவின் குடும்பத்தினரை அணுகி அனுமதி கேட்க முடிவு செய்துள்ளோம் '' என்கிறார்.

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வேடத்தில் துல்கர் சல்மானை நடிக்க வைக்கும் முடிவில் பத்ரி வெங்கடேஷ் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments