சிங்கப்பூரில் 2 மாதத்துக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

0 682

சிங்கப்பூரில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் கொரோனாவால் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 24 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இருப்பினும் அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்த்தியுள்ளது.

இதையடுத்து ஆரம்பநிலை பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி வரும் மாணவர்களுக்கு உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது.

இதேபோல் கையை சுத்தம் செய்யும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மாணவர்களும் முகக்கவசம் அணிந்தநிலையில் வகுப்புகளுக்கு வந்திருந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments