பொருளாதாரத்தை சீரமைப்பதில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் முக்கிய பங்கு

0 3285

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தமிழகம், கேரளம், கர்நாடகம், பஞ்சாப், அரியானா ஆகிய 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக மும்பை பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் இந்த 5 மாநிலங்களும் 27 சதவிகித பங்களிப்பை அளிக்கின்றன. கொரோனா காலகட்டத்திலும், இந்த மாநிலங்களில் மின் நுகர்வு, போக்குவரத்து, மொத்த சந்தை நிலவரம், கூகுள் பயன்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளதாக எலாரா செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனம் கூறி உள்ளது.

அதே நேரம், தொழில் வளர்ச்சி மிகுந்த மாநிலங்களாக கருதப்படும் மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவற்றில் அதிக அளவில் தொற்று பரவுவதால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்படவில்லை.

எனவே இந்த மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவதில் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்க வர்த்தக நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு திரும்பச் செய்வதே சிறந்தது என்றும் இந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments