டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

0 530
டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

 டெல்லி துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் 13 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

டெல்லி சிவில் லைன்சில் உள்ள ராஜ் நிவாஸ் சாலையில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகம் உள்ளது.அங்குள்ள அலுவலக விரிவாக்க கட்டிடத்தில் ஊழியர் ஒருவருக்கு முதலில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ஊழியர்கள் 13 பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துணை நிலை ஆளுநரின் அலுவலக பணியாளர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் தொற்று சோதனை நடத்தப்பட்டதாகவும், அலுவலக கட்டிடங்களில் கிருமிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments