பல ஆண்டுகளுக்கு பிறகு பெரும் சரிவை சந்தித்துள்ள வாகன விற்பனை

0 2288

பயணிகளுக்கான வாகனங்களின் விற்பனை பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடந்த மே மாதத்தில் சரிந்துள்ளதாக, வாகன உற்பத்தி தொழில்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதோடு, சந்தை விற்பனையும் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு மே மாதத்தில் வாகன விற்பனை 85 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் உற்பத்தி அதிகரித்தாலும், சந்தையில் விற்பனை என்பது அடுத்த இரண்டு மாதங்களுக்கும் மந்தமாகவே இருக்கும் என தொழில்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments