11-ஆம் வகுப்பு மாணவி தேர்வு எழுத 70 பேர் பயணிக்கும் படகு இயக்கிய கேரள அரசு

0 3718
11-ஆம் வகுப்பு மாணவி தேர்வு எழுத 70 பேர் பயணிக்கும் படகு இயக்கிய கேரள அரசு

கேரள மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி தேர்வு எழுத 70 பேர் பயணிக்கும் படகே இயக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இரு பிளஸ் ஒன் தேர்வுகள் கடந்த வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றன.

ஊரடங்கால் படகுப் போக்கு இல்லாத நிலையில் ஆலப்புழா மாவட்டம் குட்டநாட்டில் இருந்து கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு எப்படிச் செல்வது என திகைத்த மாணவி சந்திராபாபு நீர்வழிப் போக்குவரத்துத்துறைக்கு விண்ணப்பித்த நிலையில் அவர் சற்றும் எதிர்பாராத வகையில் அவருக்காக இரண்டு நாட்களும் படகு இயக்கப்பட்டது.

தேர்வு எழுதி முடிக்கும் வரை காத்திருந்த படகு மீண்டும் வீட்டுக்கும் அழைத்து வந்து விட்டது. சந்திராவிடம் டிக்கெட் விலையான 18 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments