காற்றின் தரத்தை மேம்படுத்த விரைவில் மாசுக் கட்டுப்பாடு விதிகள் அறிமுகம் - அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்

0 580
காற்றின் தரத்தை மேம்படுத்த விரைவில் மாசுக் கட்டுப்பாடு விதிகள் அறிமுகம் - அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்

இந்திய நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த விரைவில் மாசுக் கட்டுப்பாடு விதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபாட்டைக் குறைப்பது தொடர்பான நிதிக்குழு மற்றும் சுற்றுச் சூழல் துறை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கட்டுமானம் மற்றும் இடிப்பு ஆகியவற்றால் ஏற்படும் மாசுபாடு நகரங்களில் அதிகமாக இருப்பதாகவும், அவற்றுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடுமையான தண்டனைகள், அபராதங்கள் விதிக்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். தொழில்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கும் விதிகள் தொடர்பாக திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments