மாநிலங்களவை தேர்தல் : 18 இடங்களுக்கு ஜூன் 19 - ல் தேர்தல்

0 2806

மாநிலங்களவையில் காலியாக இருக்கும் 18 இடங்களுக்கு வருகிற 19- ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக இருந்த 55 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், 10 மாநிலங்களில் இருந்து 37 பேர், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  ஆந்திரா, குஜராத் உள்பட எஞ்சிய 18 இடங்களுக்கு மார்ச் 26- ல் தேர்தல் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தேர்தலுக்கான புதிய அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இதன்படி, 18 இடங்களுக்கு வருகிற 19 - ம் தேதி காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண் ணிக்கை துவங்கி, உடனடியாக முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments