உச்சம் தொட்ட அச்சம் விடாது துரத்தும் கொரோனா

0 4585

நாடு முழுவதும் ஒரே நாளில் 8 ஆயிரத்து 392 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 91 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேநேரம், சுமார் 92 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 

இந்தியாவில் பெருந் தொற்றை ஒடுக்கும் பணிகள் ஒருபக்கம் முடுக்கி விடப்பட்டாலும் மற்றொரு பக்கம் கொரோனாவின் பாதிப்பு, வேகம் எடுத்து வருகிறது.

மஹாராஷ்டிராவில், 68 ஆயிரத்தை நோக்கி, கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

2 - வது இடம் வகிக்கும் தமிழகத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டி விட்டது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்க, குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நோக்கி உயர்ந்து வருகிறது.

ராஜஸ்தானில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்க, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்தில் தலா 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு, 5 ஆயிரத்து 500 ஐ தாண்டி விட்டது. ஆந்திரா, மற்றும் பீஹாரில் வைரஸ் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை எட்டும் வகையில் உயர்ந்து வருகிறது.

இதுதவிர, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, ஜம்மு - காஷ்மீர், ஹரியானா மற்றும் ஓடிசாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 91 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரே நாளில் 230 பேர் பலி ஆனதால், கொரோனா உயிர்ப்பலி, 5 ஆயிரத்து 404 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே,கொரோனா சிகிச்சை முடிந்து, இதுவரை சுமார் 92 ஆயிரம் பேர், டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு, வீடு திரும்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments