சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் கேஸ் டைரி மாயமான விவகாரம் டிஜிபி அறிக்கை அளிக்க,மேலும் கால அவகாசம்

0 584

சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் கேஸ் டைரி மாயமானது தொடர்பான வழக்கில், டிஜிபி அறிக்கை அளிக்க, உயர்நீதிமன்றம் மேலும் நான்கு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவில், சிலை கடத்தல் தொடர்பான, 41 வழக்குகளின் புலன்விசாரணை விவர ஆவணங்களை காணாததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனையில் இருந்து தப்பியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தமிழக டிஜிபி அறிக்கை அளிக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கொரோனா காரணமாக அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டார்.

இதையடுத்து, 4 வாரத்துக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments