மகாராஷ்டிராவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி

0 1210

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

திரைத் துறையிலிருந்தும், பாலிவுட் பெரும் பிரபலங்களிடம் இருந்தும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடந்த வாரத்தில் பல்வேறு கோரிக்கைகள் வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பர படங்கள், இணையதள தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து வித படப்பிடிப்புகளும், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடைபெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக 16 பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு வழிமுறைகளையும் மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments